கருணாநிதி சிலை முன்பு விமரிசையாக நடந்த சுயமரியாதைத் திருமணம்.. திமுக நிர்வாகி நெகிழ்ச்சி!

 
சுயமரியாதைத் திருமணம் கருணாநிதி சேலம்

தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி, சேலத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவச் சிலை முன்பு நேற்று திமுக நிர்வாகி சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, சேலத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் திருவுருவச் சிலை முன்பு திமுக நிர்வாகி தம்பிதுரைக்கும், மோனிஷாவுக்கும் இடையேயான சுயமரியாதைத் திருமணம் எளிமையாகவும் சீர்திருத்த முறையிலும் நடைபெற்றது.

மணமகன் தம்பிதுரையும், மணமகள் மோனிஷாவும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு தங்களது சுயமரியாதைத் திருமணத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

இந்தத் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வைரலாகி வருகிறது. இப்புதிய ஜோடிக்கு சமூக வலைதளங்களிலும் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

வாழ்த்துகள் குவிப்பு: தந்தை பெரியார் பிறந்தநாளில் திராவிடக் கொள்கைப்படி கருணாநிதி சிலை முன்பு திருமணம் செய்துகொண்ட இந்த இளம் ஜோடிக்கு, திமுக மற்றும் திராவிடர் கழகம் (திக) உள்ளிட்ட பல்வேறு திராவிட அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் நேரில் மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.