தமிழகத்தில் பரபரப்பு... உண்மையை மறைத்து பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்!

 
சென்னை உயர்நீதிமன்றம்

உண்மை தகவல்களை மறைத்து பொது நல வழக்கை தாக்கல் செய்தவருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை தனியார் நிலமாக வகை மாற்றம் செய்து கடந்த 2007ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

உயர்நீதிமன்றம்

அந்த மனுவில் முன்னாள் எம்.எல்.ஏ., ஞானசேகரன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாகவும், நிலத்தை அளவீடு செய்து அது வனப்பகுதி நிலம் என அறிவிப்புப் பலகை வைக்க உத்தரவிடவேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர், கடந்த 2007 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து 17 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்கை தாக்கல் செய்ததற்கு உரிய காரணங்கள் விளக்கப்படவில்லை. மனுதாரரின் வயது, வருமானம் குறித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலம் வகை மாற்றம் குறித்த உண்மைகளை மறைத்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு ரூ.20 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது..

சென்னை உயர்நீதிமன்றம்

அபராதத் தொகையான ரூ.20 லட்சத்தில் இந்த வழக்கால் பாதிக்கப்பட்ட கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.10 லட்சத்தையும், தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு ரூ.10 லட்சத்தையும் நான்கு வாரங்களில் செலுத்த வேண்டும். 

மனுதாரர் ஓராண்டுக்கு நீதிமன்றத்தின் அனுமதியின்றி எந்த பொது நல வழக்கும் தாக்கல் செய்ய தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!