அடுத்தடுத்து நடத்தப்பட்ட பயங்கரமான துப்பாக்கிச் சூடு.. 22 பேர் பரிதாபமாக பலியான சோகம்..!!

 
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர்

அமெரிக்காவில் உள்ள மெய்னி மாகாணம், லீவின்ஸ்டன் நகரில் உள்ள பார் மற்றும் வணிக வளாகத்தில் புதன்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்ததாகவும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மெய்னி உள்ளாட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். 

AP23299028528805

துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தலைமறைவாக உள்ள மர்மநபரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், லீவின்ஸ்டன் நகரில் கடைகளை அடைக்கவும், மக்கள் வீட்டை பூட்டிவிட்டு உள்ளேயே இருக்குமாறும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேபோல், வீட்டின் அருகில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகள் நடந்தால் உடனடியாக போலீஸுக்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பள்ளிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடக்கும் சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில், சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.

From around the web