அடுத்தடுத்து நடந்த பயங்கர கொள்ளை.. சட்டை பேண்ட் கூட விட்டு வைக்கல.. வைரலாகும் சிசிடிவி காட்சி..!!

 
போடியில் கொள்ளை

போடியில் அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ரங்கநாதபுரம் செல்லும் சாலையில் கிருஷ்ணாநகர் பகுதி உள்ளது. இங்குள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பில் சுமார் 1000- த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஏலக்காய் வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர்.
இதேபகுதியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது மகளுக்கு மங்களூரில் வளைகாப்பு நடைபெறுவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். அன்னலட்சுமியின் உறவினரான மணிகண்டன் தினமும் விட்டுமுன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்சி செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்தன.

இதுகுறித்து போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி பெரியசாமி தலைமையில் அங்கு வந்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்களை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விட்டில் 30 பவுனுக்கு மேல் நகைகள் இருந்ததாகவும், சுமார் ரூ.2 லட்சம் பணம் இருந்ததாகவும் அன்ன லட்சுமி தெரிவி த்துள்ளார். கொள்ளையடித்த நபர் அருகில் இருந்த ஒரு மோட்டார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு சென்றது போஸீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. போடியில் உள்ள ஒரு ஐவுளிகடைக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒரு வாலிபர் கடையில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடினார். மேலும் எந்தவித பதட்டமும் இல்லாமல் கடைக்குள் இருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அது தனக்கு சரியாக உள்ளதா என போட்டுப்பார்த்து 10-க்கும் மேற்பட்ட பேண்ட்-சட்டைகளை திருடி ச்சென்றார்.

இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் போலீஸ் நிலையத்தில் அளிக்க ப்பட்டதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையன தேடி வருகின்றனர். இதனிடையே மற்றொரு சம்பவமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி
உள்ளது. இதேபோல் கிருஷ்ணா நகர்  சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வா ரியஅதிகாரி முருகதாஸ் என்பவர் விட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டிற்குள்ளும் புகுந்த கொள்ளையர்கள் அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம், எல்.இ.டி.டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர்.
இன்று காலை அவரது மகள் விட்டிற்கு வந்தபோது கொள்ளை நடந்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீஸில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web