இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

 
சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்ட தகுதியான வாக்காளர்கள் மற்றும் புதிதாகப் பதிவு செய்யவுள்ள இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களைப் பதிவு செய்வதற்கான இந்தச் சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களில் இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தச் சிறப்பு முகாம் செயல்படும். இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வி நிலையங்களில் உள்ள தேர்தல் கல்வியறிவுச் குழுக்களின் சேவைகள் திறம்படப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வாக்காளர் பட்டியல்

18 வயது பூர்த்தி அடைந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விடுபட்ட தகுதியுள்ள அனைவரும் உரிய ஆவணங்களுடன் தங்களது அருகிலுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.