அதிர்ச்சி வீடியோ!! 16 அடி பள்ளி பால்கனியில் இருந்து குதித்த மாணவன்!!

 
மாடியில் இருந்து குதித்த மாணவன்

பள்ளிப்பிள்ளைகள் தொடங்கி வயதானவர்கள் வரை அனைவரின் கையிலும் பிரிக்க முடியாததாகிவிட்டது மொபைல் போன்கள் இதில் சின்னஞ்சிறுவர்களை பொறுத்தவரை  மொபைலில் காண்பவை எல்லாம் உண்மையே என்ற தவறான வழிநடத்தலுடன் பிள்ளைகள் வளர்ந்து வருகிறார்கள் என்பது விபரீதமான உண்மை. இவைகள் பல நேரங்களில் ஆபத்துக்களையும், அசம்பாவிதங்களையும்   ஏற்படுத்தி விடுகின்றன. இதிலிருந்து பிள்ளைகளை விடுவிக்கும் வழி தெரியாமல் தடுமாறி வரும் பெற்றோர்களின் நிலையே அந்தோ பரிதாபம் .


 

உத்தர பிரதே மாநிலம் கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசித்து வருபவர் ஆனந்த் பாஜ்பா. இவரது மகன் விராட். இவர் 3ம்வகுப்பு படித்து வருகிறார்..  இவர் எந்நேரமும் மொபைலில் படங்களை பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதில் வருவது போல் நடித்து காட்டினார். அதிலும்  பாலிவுட் படமான ‘க்ரிஷ்’ படத்தின் சூப்பர் ஹீரோவை தனக்கு பிடித்திருப்பதாக தனது தாயிடம் விராட் கூறினார். இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்த ஹிருத்திக் ரோஷன், சிலிர்க்க வைக்கும் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளார். ஜூலை 19ம் தேதி  தண்ணீர்  குடிப்பதற்காக தனது வகுப்பறையில் இருந்து 4 மாணவர்களுடன் வகுப்பறையை விட்டு வெளியில் சென்றார்.

தற்கொலை

அப்போது, அந்த சிறுவன் தனது நண்பர்களையும் குதிக்கலாம் எனக் கூறினார். அவருடைய நண்பர்கள் பின்வாங்கினர்.   விராட் திடீரென ‘நான் சூப்பர் ஹீரோ வருகிறேன்’ எனக் கூறிக்கொண்டே 16 அடி உயரத்தில் இருந்து குதித்து விட்டார்.   இதில் படுகாயம் அடைந்த சிறுவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.   தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெற்றோர் மனதில் பீதியை கிளப்பி வருகிறது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web