தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு... உயிருடன் புதைந்த 13 தொழிலாளர்கள் இறந்ததாக அறிவிப்பு!

 
தங்கச் சுரங்கம்

கிழக்கு ரஷ்யாவில் தங்கச் சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு விபத்தில்  12 தொழிலாளர்கள் பலியானார்கள். கிழக்கு ரஷியாவின் ஸெய்ன்ஸ்க் மாவட்டத்தில் தங்கச் சுரங்கம் ஒன்றில் கடந்த மாதம் 18ம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் சுரங்கப் பணியாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்டனர்


 

சுமார் 125 மீட்டர் ஆழமுள்ள சுரங்கத்தினுள் சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணிகள் கடந்த 2 வாரங்களாக  200க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்த நிலையில், சுரங்கத்தைச் சுற்றி வெள்ள நீர் புகுந்ததால் மீட்பு பணிகள் மேலும் தாமதமடைந்தது. அதன் பின்னர், அதிக திறன் வாய்ந்த மோட்டார் பம்ப்புகள் பயன்படுத்தப்பட்டு சுரங்கத்திலிருந்து நீரை வெளியேற்றி வந்த மீட்பு பணியினர், ஒரு கட்டத்தில், சுரங்கத்தினுள் சூழ்ந்திருக்கும் நீரை முழுமையாக வெளியேற்ற முடியவில்லை என தெரிவித்தனர். 

தங்கச்சுரங்கம்


தற்போது சுரங்கத்தின் பிற பகுதிகளும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், உள்ளே சிக்கிக்கொண்ட பணியாளர்கள் 13 பேர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றும், மீட்புப்பணி நிறைவு பெற்றதாகவும், உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web