பேராசிரியை தற்கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம்.. தந்தை பரபரப்பு புகார்!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் கல்லூரிப் பேராசிரியை தற்கொலை செய்துக் கொண்டதாக பதிய பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக உயிரிழந்த பேராசிரியையின் தந்தை மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில், பரபரப்பு புகார்களை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மாா்க்கெட் தெருவைச் சோ்ந்த தம்பதி பிரவீன்குமாா் - ஷொ்லின் கோல்டா (35). இருவரும் நாசரேத்தில் தனியாா் கல்லூரி ஒன்றில் பேராசிரியா்களாக பணிபுரிந்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவா்களுக்கு, 4 வயது ஒரு மகன் உள்ளாா். ஷொ்லின் கோல்டா 5 மாத கா்ப்பிணியாக இருந்த காரணத்தினால் கல்லூரிக்குச் செல்லாமல் விடுப்பில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னா், பிரவீன்குமாா் குளியலறைக்குச் சென்ற நிலையில், ஷொ்லின் கோல்டா திடீரென படுக்கை அறைக்குள் சென்று கதவைப் பூட்டி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக ஷெர்லின் கோல்டாவை பிரவீன்குமாா் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், வழியிலேயே ஷொ்லின் கோல்டா உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தாய் ஜான்சிராணி அளித்த புகாரின் பேரில், நாசரேத் காவல் ஆய்வாளா் ஜீன்குமாா் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேத பரிசோதனைக்கு பின் பேராசிரியை ஷெர்லின் கோடாவின் உடல் திருமறையூர் சிஎஸ்ஐ மறுரூப ஆலயம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஷெர்லின் கோல்டா தந்தை ஜெபசிங் சாமுவேல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு எழுத்து மூலம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த மனுவில், "எனது மகளின் நினைவிடத்தில் விசேஷம் நடந்தது. அந்த இடத்தில் சென்ற போது எனது பேரன் டிஜோ வின்ஸ் என்னிடம் எனது மகளுக்கு நடந்த கொடுமைகளையும் எனது மகளின் கணவர் பிரவீன் குமார், மகளை அடித்து துன்புறுத்தியதையும் கூறினான். உடனே அதிர்ச்சி அடைந்தேன்.

இந்நிலையில் எனது மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையும் எனக்கு இன்று வரை கிடைக்கவில்லை. ஆகவே எனக்கு மகள் இறப்பில் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனது மகளின் கணவர் பிரவீன் குமார் அடித்து தான் கொலை செய்திருப்பாரா? இல்லை கொலை செய்ய தூண்டியிருப்பாரா? என சந்தேகம் எழும்பியுள்ளது. ஆகவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் பேரன் - தாத்தாவிடம் கூறிய ஆடியோவும், வீடியோவும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
