அதிகாலையில் அதிர்ச்சி…. நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி பயங்கர விபத்து.… 2 பேர் பலி.. 3 பேர் படுகாயம்!
Apr 11, 2025, 08:48 IST

தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்புலன்ஸ் ஒன்று மோதியது. இந்த பயங்கர விபத்தில் ஆம்புலன்ஸ் சுக்கு நூறாக உடைந்த நிலையில் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்ட நோயாளி முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடைய மனைவி கல்யாணி இந்த விபத்தில் உயிரிழந்தார். அதன்பிறகு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அதிகாலையில் நடந்த இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
From
around the
web