தினந்தோறும் 84.32 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்... இன்று மகளிருக்கான 'வெற்றிப் பயண திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்!

 
பெண்கள் மகளிர் பேருந்து பிரியதர்ஷினி

மகளிருக்கான இலவச பேருந்து பயணச் சலுகையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் 'வெற்றிப் பயணம்' என்ற புதிய திட்டத்தை இன்று முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

இதுவரை சாதாரண நகரப் பேருந்துகளில் மட்டும் நடைமுறையில் இருந்த மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம், இனி எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், எல் எஸ் எஸ், புறநகர் மற்றும் 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பாதை பேருந்துகள் உள்ளிட்ட அனைத்துப் பேருந்துகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பேருந்து பயணம் விஜய்

இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 12,692 பேருந்துகளில், நாள்தோறும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.