பெற்றோர்களே உஷார்... கடலை மிட்டாய்களில் நெளிந்த புழு... உணவே விஷமாகும் கொடுமை!

 
 கடலை மிட்டாய்

பலரது வீடுகளில் குழந்தைகளிடம் சில்லறைகளைக் கொடுத்து, தங்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வாங்கிச் சாப்பிட சொல்லி பழக்கப்படுத்தி இருக்கிறோம். ஆனால், குழந்தைகள் கடைகளில் என்ன வாங்கி உண்கிறார்கள் என்று கவனிப்பதில்லை. வணிகமயமாகி விட்ட வாழ்வியல் முறையில், பெரும்பாலான உணவு பண்டங்களின் தயாரிப்பாளர்கள், ஆரோக்கியத்தைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.

அதனால் பெற்றோர்களே.. உங்கள் குழந்தைகளைக் கண்காணியுங்க. அவர்கள் வாங்கி உண்ணும் திண்பண்டங்கள் குறித்து அக்கறை செலுத்துங்க. சாக்லேட்களில் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்து, காலாவதியான திண்பண்டங்களை விற்பனை செய்வது என பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், கடலைமிட்டாய்களில் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது தெரிய வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள பேருந்து நிலையம் எதிரே உள்ள பிரபல பல்பொருள் அங்காடியில் மன்னவராதி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி சந்தன பிரபு தனது குழந்தைகளுக்கு இரு தினங்களுக்கு முன்  கடலை மிட்டாய் இரண்டு பாக்கெட்டுகளை வாங்கினார். வீட்டுக்குச் சென்று குழந்தைகளுக்குக் கொடுப்பதற்காக கடலை மிட்டாய் பையைத் திறந்து பார்த்தபோது, அதில் இருந்து புழுக்கள் வெளியேறின.

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அதே டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு சென்று புகார் செய்தார். கடைக்காரர்கள்  அதற்கு பதிலாக வேறு இரண்டு கடலை மிட்டாய்களைக் கொடுத்தனர். ஆனால் அதிக புழுக்கள் நெளிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்காரர்களிடம் புகார் அளித்தபோது, ஊழியர்கள் அவர்களை விரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் சந்தனபிரபு புகார் அளித்தார். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடையில் இருந்த கடலை மிட்டாய்கள் அனைத்தையும் கைப்பற்றி ஆய்வுக்கு கொண்டு சென்றனர்.

எனவே, குழந்தைகள் சாப்பிடும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கடலை மிட்டாய்களே இப்படி என்றால், சாலையோரக் கடைகளில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே நிலக்கோட்டையில் உள்ள அனைத்து கடைகளிலும் உணவுப் பொருட்களின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web