அதிர்ச்சி... வேகத்தடை கிடையாது... குறுகிய பாலம்... 20 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்!

 
சேத்தியாத்தோப்பு விபத்து

குறுக்கலான பாலத்தில், வேகத்தடையும் அமைக்கப்படாத காரணத்தில் அடிக்கடி விபத்து நேரிடுவதாக பல காலங்களாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 20 அடி பள்ளத்தில் கார் ஒன்று சீறிப் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் சென்னை கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கி சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சொகுசு கார் குமாரக்குடி குறுகிய மேம்பாலத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட முயன்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் வீராணம் ஏரிக்கு செல்லும் 20 அடி ஆழமுள்ள வடிகால் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் விழுந்த கார் பலத்த சேதமடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் இளஞ்செழியன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறுகிய மற்றும் ஆபத்தான இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், பாலத்தை கடந்து செல்ல வாகனங்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.

பாலத்தை பலமுறை இடித்தும், புதிய பாலம் கட்ட மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டி, பாலத்தின் இருபுறமும், இரண்டு அடுக்கு வேகத்தடை அமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web