அசத்தல் வீடியோ... வெட்டும் போது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் அதிசய மரம்!

 
மரத்திலிருந்து தண்ணீர்

  தொழில்நுட்ப வளர்ச்சி என்ன தான் நம்மை உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து கொண்டாடினாலும் இயற்கையின் முன் அனைவரும் வெறும் தூசு தான். இயற்கை பலப்பல அதிசயங்களை தன்னகத்தே மறைத்து கொண்டுள்ளது. அப்படி ஒரு அதிசய மரம் தான் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த அதிசய மரம்  மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை தனக்குள்  சேகரித்து கொள்கிறது. இந்த மரத்தின் பட்டைகளை வெட்ட அதிலிருந்து தண்ணீர் வெளியேறுவதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 


இந்த வீடியோவை  ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இந்திய லாரல்  எனப்படும் இந்த மரத்தின் பட்டைகளை வெட்ட வெட்ட, தண்ணீர் குடம் குடமாக பீய்ச்சி அடிக்கிறது.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி  வருகிறது.  கோதாவரி பகுதியில் உள்ள பாபிகொண்டா மலைத்தொடரில் வசிக்கும் கொண்டா ரெட்டி பழங்குடியினர் மூலம் இத்தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த  வனத்துறையினர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மரத்திலிருந்து தண்ணீர்

  இதுகுறித்து வனத்துறையிடம் ஆய்வு மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.  இந்த மரத்தின் பெயர் இந்திய லாரல். அறிவியல் பெயர் Ficus microcarpa ஆகும். இது ஒரு வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல மரமாக அறியப்படுகிறது. இந்த  வகையான  மரங்கள் பெரும்பாலும் ஆசியா, மேற்கு பசிபிக் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் தான் அதிகம் காணப்படுகிறது. ஒரு அலங்கார மரமாக வீடுகளில் வளர்ப்பதும் உண்டு. இதன்  அடர்த்தியான இலைகள் பளபளப்பான பச்சை ஈட்டி போல் காணப்படுகிறது. அப்பகுதிகளில் வாழும்  பல பறவைகளுக்கு வாழ்விடமாகவும் அமைகிறது.  இதில் இருக்கும் பழங்களை பல பறவைகள் உண்டு பசியாறி வருகின்றன.  

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

 

From around the web