ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்... மேலும் ஒருவர் கைது!

 
வீரமணி

ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளர் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பான வழக்கில், அவரது வீட்டுக் காவலாளி சீனிவாசனை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

வீரமணி தனது வீட்டுக்கு சிறுமிகளை அழைத்து வருவது தெரிந்திருந்தும், அது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்காமல் மறைத்ததாக சீனிவாசன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரமணி சாந்தி

இந்த வழக்கில் இதுவரை 12 சிறுமிகளின் புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே வீரமணி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. தற்போது வீட்டுக் காவலாளியும் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் கைது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

மேலும், வழக்கில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேருக்கு எதிராக வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெம் வீரமணி

சிறுமிகள் அளித்த புகார்கள் மற்றும் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.