தண்ணீர் வாளியில் விளையாடிய குழந்தை பரிதாபமாக பலி.. பேரதிர்ச்சியில் பெற்றோர்கள்..!!

 
வாளி

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது பெண் குழந்தை வாலியில் இருந்த தண்ணீரில் மூழ்கி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த திருவலம், ஆரிமுத்து மேட்டுர், நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் ரேச்சல் (வயது 2) இரவு ரேச்சிலின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் சிறுமி கைகளை நனைத்தபடி நீரில் விளையாடியுள்ளார்.

Katpadi, Vellore : காட்பாடி: வள்ளிமலை காட்பாடி சாலையில் சுவரில் கார் மோதிய  விபத்தில் ஒருவர் பலி; போலீசார் விசாரணை | Public App

அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி தவறி வாலியில் உள்ள தண்ணீரில் விழுந்து மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியின் தாய் குழந்தை வாலியில் உள்ள தண்ணீரில் மூழ்கிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்டு பார்த்தபோது மகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. 

Child Diedகுழந்தை பலி,வாளி தண்ணீரில் மூழ்கிய குழந்தை பலி - child drown in  bucket - Samayam Tamil

மகளின் உடலை பார்த்து தாய் கதறி துடித்தார். இது குறித்து தகவல் அறிந்த திருவலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

From around the web