சபாநாயகரிடம் திடீரென ஆவேசமான சி.வி.சண்முகம் - வைரலாகும் வீடியோ!

 
சி.வி.சண்முகம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரத்தைப் பேச அழைத்தபோது, மற்றொரு அதிமுக எம்.எல்.ஏவான சி.வி.சண்முகம் திடீரென ஆவேசமடைந்ததுடன் வெளிநடப்பு செய்யவும் முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் விவாதத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரத்தை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுவதற்கு அழைப்பு விடுத்தார். தன்னை முதலில் பேச அனுமதிக்காமல் தளவாய் சுந்தரத்தை எப்படி அழைக்கலாம் என்று கேள்வியெழுப்பி சி.வி.சண்முகம் திடீரென ஆவேசமானார்.

சபாநாயகரின் நடவடிக்கையை ஏற்க மறுத்த அவர், அவையிலிருந்து வெளிநடப்பு செய்ய முயன்றார். உடனே சக உறுப்பினர்கள் அவரைச் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.