குழந்தைகளுடன் குழந்தையாய் மாறிய பிரதமர்.. மேஜிக் வித்தைகள் செய்து காட்டி அசத்தல்..!!

 
பிரதமர் மோடி

குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி, அவர்களுக்கு மேஜிக் ட்ரிக்ஸ் செய்து காட்டிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தில் தம்மைச் சந்திக்க வந்த சில குழந்தைகளுடன் விளையாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. “என் இளம் நண்பர்களுடன் சில மறக்கமுடியாத தருணங்கள்” என தலைப்பிட்டு தனது சமூக ஊடக பக்கங்களில் அந்த வீடியோவை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவில் இருக்கு சிறுமி, சிறுவனின் காதுகளை இழுத்து அவர்களுடன் விளையாடும் பிரதமர் மோடி, பின்னர் அவர்களுக்கு நாணயத்தை வைத்து மேஜிக் செய்து காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிரும் பலரும், பிரதமர் மோடியின் வித்தியாசமான பக்கம் இது எனவும், அவருக்குள் இருக்கும் குழந்தைத்தனம் வெளியே வந்துள்ளது எனவும் தெரிவித்து வருகின்றனர்.


 அக்குழந்தைகள் யார் என்ற தகவல் அதில் பதிவிடப்படவில்லை. இருப்பினும், ஜார்கண்ட் சென்ற பிரதமர் மோடி, அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனின் பேரக் குழந்தைகளுடன் விளையாடிய வீடியோதான் அது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அவரும் உறுதிபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web