வெடித்து சிதறிய எரிமலை... விமானங்கள் ரத்து!

 
எரிமலை


 
இத்தாலியில் ரோமில் உலக புகழ் பெற்ற இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை வெடித்து சிதறியுள்ளது. இதனால் தொடர்ந்து  தீக்குழம்பு வெளியாகி வருகிறது.  பனிபோர்த்திய மவுண்ட் எட்னா எரிமலையில் சூடான நெருப்பு குழம்பு ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  கேடானியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


இத்தாலி, ரோமிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஷிஷிலி தீவில் இந்த எட்னா எரிமலை அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,030 மீட்டர் உயரம் கொண்ட மவுண்ட் எட்னா எரிமலை அடிக்கடி வெடித்து சிதறுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.  எரிமலை வெடிப்பினால் கிளம்பும் சாம்பல் அருகில் இருக்கும் விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவி வருவதால் பாதுகாப்பு கருதி விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  

From around the web