சேர்ந்து வாழ வராத மனைவி.. ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன்!

 
ரவிச்சந்திரன்

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே தைலானூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60), இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவரது மனைவி பெரியம்மாள் (55). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். சேலம் டவுனில் பழ வியாபாரம் செய்து வரும் பெரியம்மாள் தனியாக வசித்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற ரவிச்சந்திரன், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டார். நேற்று இரவு மீண்டும் குடிபோதையில் அங்கு சென்ற ரவிச்சந்திரன், மனைவியை அடித்து கீழே தள்ளி, மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

கொலை

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web