நடைப்பயிற்சிக்கு சென்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய காட்டுயானை!

தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் துடியலூர் அருகே வசித்து வருபவர் நடராஜ். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இவர் அதிகாலையில் தடாகம் சாலையில் நடை பயிற்சி செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதே போல் நேற்றும் நடைபயிற்சிக்கு சென்றிருந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து உணவை தேடி தடாகம் சாலைக்கு வந்த காட்டு யானை நடராஜனை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க கோரி மக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பிறகு அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதேபோல் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர் ஜி அருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து நடராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அத்துடன் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!