பட்டப்பகலில் விபரீதம்... நடுரோட்டில் தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

கர்நாடக மாநிலத்தில் பெங்களூருவில் பனசங்கரி பகுதியில் வசித்து வருபவர் 36 வயது இளம்பெண். இவர் அதே பகுதியில் 2வது ஸ்டேஜ் சாலையில் தனியாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் இளைஞர் ஒருவர் அந்த இளம் பெண்ணை பின்தொடர்ந்து வந்தார். அந்தப் பெண்ணின் அருகில் சென்றதும் அவருக்கு தகாத முறையில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்பு அங்கிருந்து வேகமாக பைக்கை எடுத்துக் கொண்டு சென்றார்.
இதனால் பதற்றம் அடைந்த அந்தப் பெண் அந்த இளைஞரின் பைக் நம்பரை குறித்து வைத்து கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அத்துடன் அந்த இளைஞரின் பைக் எண்ணையும் காவல்துறையிடம் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பைக் பதிவு எண்ணை வைத்து அந்த இளைஞரை தேடினர்.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர். பெயர் இஸ்லாமுத்தின் என்பவர் என தெரிய வந்தது. அதன் பின் அவரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் அந்த இளம்பெண் சாலையில் தனியாக சென்று கொண்டிருந்ததை கவனித்ததால் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக இஸ்லாமுத்தின் வாக்குமூலம் அளித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!