70 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடு: 200 பேரை பலிகொண்ட அரியலூர் ரயில் விபத்து நினைவு தினம் இன்று!

 
அரியலூர்

அரியலூரில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (நவம்பர் 23) நிகழ்ந்த கோர ரயில் விபத்து இன்றுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இரவு 9 மணிக்குச் சென்னையில் இருந்து 12 பெட்டிகளுடன் தூத்துக்குடி நோக்கி ரயில் புறப்பட்டது.

65th anniversary of Ariyalur train accident that killed 250 people | 250 உயிர்களை பலிவாங்கிய அரியலூர் ரயில் விபத்தின் 65ஆவது ஆண்டு நினைவு தினம்...!

வடகிழக்குப் பருவமழை காரணமாக அப்போது கனமழை பெய்ததால், அரியலூர் மற்றும் சில்லக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள மருதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மருதையாற்றுப் பாலத்தின் மீது ரயில் சென்றபோது வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், அனைத்துப் பெட்டிகளும் ஆற்றில் கவிழ்ந்தன.

Nightmare in Ariyalur, a brave tale from 1956 - The Hindu

இந்த விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். விபத்துக்குப் பொறுப்பேற்று அப்போதைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார்.பல தசாப்தங்கள் கடந்தும் இந்தச் சம்பவம் பொதுமக்கள் மனதில் ஆறாத வடுவாக நிலைத்துள்ளது