அதிர்ச்சி... தொண்டையில் உணவு சிக்கி இளம்பெண் உயிரிழப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டையில் உணவு சிக்கி இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகள் சங்கர கோமதி (22). இவர் நேற்று மதியம் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது தொண்டையில் உணவு சிக்கி திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரை குடும்பத்தினர் உடனடியாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் கோமதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
