கரூரில் பயங்கரம்... காதலித்து வேறொருவனை திருமணம் செய்த இளம்பெண்... கூலிப்படையுடன் கொல்ல திட்டமிட்ட காதலன்!

திருச்சி மாவட்டம், வையம்பட்டியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவருடன் வகங்கை மாவட்டம், காளையார் கோவில், சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் (24) என்பவரும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இவர்களது நட்பு வளர்ந்த நிலையில், இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததில் கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து ஒன்றாக ஊர் சுற்றியும் வந்ததாக கூறப்படும் நிலையில், சிவசங்கரின் பழக்கவழக்கம் பிடிக்காததால் திருச்சியில் இருந்த இளம்பெண் திடீரென சிவசங்கரிடம் பேசுவதை நிறுத்தி விட்டு, அவரிடம் இருந்து விலகிச் சென்றுள்ளார்.
சிவசங்கரிடம் இருந்து காதலைத் துண்டித்த இளம்பெண் அதன் பின்னர் கரூர் மேலப்பாளையத்தைச் சேர்ந்த அஜித்(22) எனும் இளைஞரைக் காதலித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி 13ம் தேதி அஜித்தைத் திருமணமும் செய்துக் கொண்டார்.
இதையறிந்த சிவசங்கர் தனக்கு கிடைக்காத பெண் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் அவரை கொலைச் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனது முன்னால் காதலியையும், அவரது கணவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் நேற்றிரவு தங்கி இருந்துள்ளார். அவருடன், கூலிப்படையைச் சேர்ந்த மதுரையைச் சேர்ந்த ஆனந்த் (38) மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் ஹரிஹரன் (20) ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்த தகவல் பசுபதிபாளையம் தனிப்பிரிவு காவலர் ராமலிங்கம் என்பவருக்கு கிடைத்துள்ளது. உடனடியாக தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் சிவசங்கர் மற்றும் ஆனந்த், ஹரிஹரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர்.அதனைத்தொடர்ந்து 3 பேரையும் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!