அப்பா என்னை மன்னிச்சிடுங்க... கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!.

 
ஜோயல்

கர்நாடக மாநிலத்தில் சாமுண்டேஸ்வரி நகரில் வசித்து வருபவர் பீட்டர் கொல்லப்பள்ளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்தார்.  இருப்பினும், குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். இதனால் பீட்டர் கடும் மன உளச்சலில் இருந்ததாக தெரிகிறது. பீட்டர் தனது சகோதரர் ஜோயல் என்பவருடன் தங்கி வந்தார்.  

ஆம்புலன்ஸ்

இந்நிலையில், சம்பவத்தன்று ஜோயல், ஞாயிறுக்கிழமை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். பிரார்த்தனை முடிந்து வீடு திரும்பியபோது, தனது சகோதரர் பீட்டர் உயிரிழந்து  கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.அவரது சடலத்தின் அருகில் கடிதம் ஒன்றும் இருந்தது.  தனது மரணத்திற்கு காரணம் எனது மனைவியின் கொடுமையே என குறிப்பிட்டு இருந்தது. இந்த கடிதத்தில் தனக்கும் தனது மனைவிக்கும் கடந்த 3 மாதங்களாக குடும்பத்தகராறு இருப்பதாக பீட்டர் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தில், “அப்பா, மன்னிக்கவும். என் மனைவி பிங்கி என்னை துன்புறுத்துகிறாள்.

உத்தரபிரதேச போலீஸ்

அவள் என் மரணத்தை விரும்புகிறாள். என் மனைவியின் சித்திரவதையால் நான் உயிரிழந்து  கொண்டிருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.  அண்ணா தயவுசெய்து பெற்றோரை கவனித்துக் கொள்ளுங்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்தவர் 3 மாதங்களுக்கு முன்பு வேலை இழந்ததால் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே பதற்றம் மேலும் அதிகரித்ததாக   கூறுகின்றனர். இதுகுறித்து ஜோயல்  “எனது சகோதரருக்கு நீதி கிடைக்க வேண்டும், பெண்ணை கைது செய்ய வேண்டும், என் சகோதரனைப் போல யாரும் பாதிக்கப்படக்கூடாது” எனக் கூறினார்.  

From around the web