பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சக நண்பர்கள் மாடியில் இருந்து தள்ளி இளைஞர் பலி... பெரும் சோகம்!

 
கார்த்திக்

மகாராஷ்டிர மாநிலம்  தானே மாவட்டத்தில் உலாஸ் நகரில் வசித்து வருபவர்  கார்த்திக். இவர் தனது 23 வது பிறந்தநாளை ஜூன் 27ம் தேதி   நண்பர்களுடன் கொண்டாடினார். அதன்படி அவருடைய நண்பர் நிலேஷ் என்பவரது  வீட்டின் 4 வது மாடியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. கேக் கட் பண்ணி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் வரை அனைத்தும் சரியாக நடந்தது.

நைட் பார்ட்டி

இதனையடுத்து பார்ட்டி நேரத்தில்  பீர் குடிப்பது தொடர்பாக நண்பர்களிடையே வாக்குவாதம் தொடங்கியது. இதில் வாக்குவாதம் முற்றி அடிதடி சண்டையானது. இந்த சண்டையில்  சக நண்பர்கள் சேர்ந்து தள்ளிவிட்டதில் கார்த்திக் 4வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் பயந்து போய் ஓடி வந்து பார்த்தபோது கார்த்திக் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ்


இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கார்த்திகை தாங்களாகவே கீழே தள்ளிவிட்டதாக நண்பர்கள் அதிர்ச்சி தரும் வாக்குமூலத்தை அளித்துள்ளனர். பீர் குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கார்த்திக் நிலேஷை பீர் பாட்டிலால் அடித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் கார்த்திகை மாடியில் இருந்து தள்ளிவிட்டுள்ளனர். இதனை நண்பர்கள் கண்ணீருடன் விசாரணையில் தெரிவித்துள்ளனர். கார்த்திக் நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

From around the web