தேனீக்களை முகத்தில் மொய்க்கவிட்டு நெல்லை வாலிபர் புதிய உலக சாதனை!

 
தேனீக்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆயிரக்கணக்கான தேனீக்களைத் தனது முகம் முழுவதும் மொய்க்கவிட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற முருகன் (27). இவர் தனது முகம் முழுவதும் ஆயிரக்கணக்கான இந்திய தேனீக்களை சுமார் 5 மணி நேரம் 3 நிமிடங்கள் வரை மொய்க்கவிட்டு அசத்தியுள்ளார்.

இச்சாதனை 'சீனா உலக சாதனை புத்தகம்' மற்றும் 'சோழன் உலக சாதனை புத்தகம்' ஆகியவற்றில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. மனித சமூகத்திற்குத் தேனீக்களின் அவசியத்தையும் அவற்றைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பொதுமக்கள் மத்தியில் உணர்த்துவதற்காகவே இந்த முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார். இதற்கு முன்பாகக் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் படைத்திருந்த உலக சாதனையை முருகன் இதன் மூலம் முறியடித்துள்ளார்.