’ மஞ்சுமெல் பாய்ஸ் ’ படத்தை போல் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்!

 
மஞ்சுமெல் பாய்ஸ்
 

 இளசுகள் சும்மாவே ஆட்டம் போட்டு திரியும் நிலையில் தற்போது வந்துள்ள மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்து அனைவரும் வீர சாகசம் செய்ய துணிந்துவிட்டனர். சில நேரங்களில் விபரீதத்தில்  முடியலாம் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள், உறவினர்களுடன்  தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். வார இறுதி விடுமுறையில் கடந்த 3 நாட்களாக கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்கின்றது மாவட்ட நிர்வாகம்.

மஞ்சுமெல் பாய்ஸ்

அந்த வகையில்  தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள்  கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு  டால்பின் நோஸ் பகுதியை பார்வையிட வந்தனர். அங்கு அந்த இளைஞர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது, அவர்களில் தன்ராஜ் என்ற இளைஞர் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார். இதையடுத்து அவருடன் வந்த இளைஞர்கள் அவரை மீட்க முயற்சித்தனர். அத்துடன் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொடைக்கானல்

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தன்ராஜை உயிருடன் மீட்டனர். கீழே விழுந்ததில் அவருக்கு கை, கால்கள் மற்றும் தலையில் சிறுசிறு காயம் ஏற்பட்டு இருந்தது.  இதையடுத்து அவருக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இளைஞர் பள்ளத்தில் தவறி விழுந்த சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலை சுற்றிப்பார்க்க வரும்   சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான பகுதிக்கு செல்லாமல் கவனமாக சுற்றி பார்க்குமாறு வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web