பரபரப்பு...விஜய் வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர்!

 
ஓய்


 
தமிழகத்தில் சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ளது தவெக தலைவர்  விஜய் . அவரது வீட்டின் மாடியில் அமர்ந்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நபர் விஜய்யின் வீட்டு மொட்டை மாடிக்கு சென்றதாகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.  

தவெக விஜய்

பாதுகாப்பு வளையங்களை தாண்டி வீட்டின் மொட்டை மாடிக்கு அந்த இளைஞர் சென்றது எப்படி என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு உள்துறை அமைச்சகம் அவருக்கு ‘Y’ பாதுகாப்பு வழங்கியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் நடந்தபோது, விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த ‘Y’ பிரிவு பாதுகாப்பு இருந்தபோதிலும், இந்த நபர் எவ்வாறு பாதுகாப்பை மீறி உள்ளே நுழைந்தார் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. ஒரு தகவலின்படி, விஜய்யின் நீலாங்கரை வீட்டின் மொட்டை மாடியில் நேற்று மாலை நடைபயிற்சிக்காக மொட்டை மாடிக்குச் சென்ற விஜய் இளைஞர் ஒருவர் இருப்பதை கவனித்துள்ளார்.

விஜய்  ஜனநாயகன்

இளைஞரிடம் பொறுமையாகப் பேசி விஜய் அவரை தரை தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால் விஜய் அந்த இளைஞரை மருத்துவமனையில் அனுமதிக்கும்படி  அறிவுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.