ரயிலில் இளம்பெண்ணிடம் சில்மிஷம்... தர்மஅடி கொடுத்த பயணிகள் - மதுரை ரயிலில் பரபரப்பு!

 
ரயிலில் சில்மிஷம் ரயிலில் சில்மிஷம்

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி மதியம் சென்று கொண்டிருந்த விரைவு ரயிலில், பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததைப் பயன்படுத்தி, ஒரு நபர் அருகில் இருந்த பெண்ணைத் தவறான முறையில் தொட்டதாகத் தெரிகிறது. அந்த நபர் தன்னைத் தகாத முறையில் தொட்டதை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாக சத்தமிட்டு அவரைத் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் கணவருக்கும், சம்மந்தப்பட்ட நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணவர் மற்றும் அங்கிருந்த மற்ற பயணிகள் அந்த நபரைச் சரமாரியாகத் தாக்கினர்.

ரயிலில் சில்மிஷம்

ரயில் பெட்டிக்குள் அந்த நபரை பயணிகள் சூழ்ந்து கொண்டு தாக்கும் காட்சிகளை மற்ற பயணிகள் தங்களது செல்போனில் படம்பிடித்துள்ளனர். இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ரயிலில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டிப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

ரயிலில் சில்மிஷம்

ரயில் அடுத்த நிலையத்தை அடைந்ததும், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் இது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த நபரைப் பிடித்துப் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மதுபோதையில் இருந்தாரா அல்லது திட்டமிட்டு இது போன்ற செயலில் ஈடுபட்டாரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.