இளம்பெண்ணிடம் ரூ.40 லட்சம் மோசடி.. திருமணம் செய்துக் கொள்வதாக ஏமாற்றிய புகார் - சீரியல் நடிகர் சரவணன் கைது!

 
சின்னத்திரை நடிகர் சரவணன்

சென்னையில் பெண் வழக்கறிஞரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 40 லட்சம் ரூபாய் வரை பண மோசடி செய்த புகாரில், சின்னத்திரை நடிகர் சரவணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொலைக்காட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் வழக்கறிஞரும், சின்னத்திரை தொடர்களில் நடித்து வரும் நடிகர் சரவணனும் கடந்த சில காலமாக விருகம்பாக்கம் பகுதியில் ஒரே வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தங்களை இருவரும் திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து, அந்தப் பெண் வழக்கறிஞரிடம் பல்வேறு கட்டங்களாக நடிகர் சரவணன் ரூ.40 லட்சம் வரை பணத்தைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் நடிகர் சரவணனைக் காவல்துறையினர் கைது செய்து மேற்கொண்டு வருகின்றனர்.