பெற்றோர் கண் எதிரே இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு... சுற்றுலா சென்ற போது சோகம்!

 
பிரகதீஷ்வர்

 மயிலாடுதுறை மாவட்டம் பொன்னி நகர் பகுதியில் வசித்து வருபவர் 57 வயது தேவாதிராஜன். இவர்  தனியார் பள்ளி முதல்வர். இவருக்கு 2 மகன், 2 மகள்கள்  . இதில் ஒரு மகன் 24 வயது பிரதீஷ்வர்  பிடெக் பட்டதாரி. பிரகதீஷ்வர்  சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தேவாதிராஜன், மனைவி மற்றும் மகன் பிரதிஷ்வருடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றனர்.

நீச்சல்

குடும்பத்துடன்   ரயிலில் நாகர்கோவில் வந்து அன்றைய தினம் அங்கு தங்கி விட்டு நேற்று காலை பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி போன்ற பகுதிகளுக்கு சென்றனர். நேற்று மாலையில் மாத்தூர் தொட்டிப்பாலத்திற்கு  கீழே பாறைகளுக்கு இடையே பாய்ந்து செல்லும் பரளியாற்றில் குளித்தனர்.  அப்போது பிரதீஷ்வர் பாறையில் படிந்துள்ள பாசியில் கால் இடறி தண்ணீரில் விழுந்துவிட்டார்.  

ஆம்புலன்ஸ்
இதை பார்த்த அவரது பெற்றோர் அலறிக் கூச்சலிட்டனர்.  அங்கு அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை போராடி மீட்டு  உடனடியாக குலசேகரம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரதீஷ்வர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக  தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெற்றோர் கண்முன் இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web