10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... அதிர வைத்த ஆசிரியர்! திருப்பூரில் அதிர்ச்சி!

 
மாணவி பலாத்காரம்!! ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்!! தமிழக ராணுவ வீரரின் வெறிச்செயல்!!

திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி வளாகத்தில் வைத்தே 10ம் வகுப்பு மாணவிக்கு பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியரின் இந்த நடவடிக்கை குறித்து , மாணவி வீட்டிற்கு சென்றதும் தனது பெற்றோரிடம் கதறியழுதப்படியே கூறியுள்ளார். 

திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூர் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை கருப்பசாமி (41) என்ற ஆசிரியர் நேற்று முன்தினம் பள்ளியின் மாடிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் மாணவியிடம் அந்த ஆசிரியர் தவறாக பேசியதுடன், தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றதும் மாணவி பெற்றோரிடம் கூறி உள்ளார். 

கைது

 இந்நிலையில் அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியர், மாணவியிடம் பள்ளியில் நடந்ததை ஏன் பெற்றோரிடம் சென்று கூறினாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி பள்ளி வளாகத்தில் நின்று அழுது கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மாணவியின் சித்தி பள்ளிக்குள் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரை தாக்கியதாகவும் தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியர் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் கலவரம் காவல்துறை மறியல் போராட்டம்

இதைத்தொடர்ந்து மாணவி சார்பில் கொங்குநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் கருப்பசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள் 

From around the web