துவங்கியது கொண்டாட்டம்... 4 நாட்களில் ரூ.29,000 கோடிக்கு ஆன்லைனில் விற்பனை!

 
ஆன்லைனில் பொருள் விற்பனை
இ-காமர்ஸ் நிறுவனங்களின் பண்டிகை கால சிறப்பு விற்பனை முதல் 4 நாட்களிலேயே ரூ.29,000 கோடியை கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் இ-காமர்ஸ் தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பு விற்பனையை அறிவித்தன. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அன்று, 'அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்" மற்றும் "ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ்" என்ற பெயரிலும் தீபாவளி சிறப்பு விற்பனை ஆரம்பமானது. அதுமட்டுமின்றி, மீஷோ, ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தீபாவளி ஸ் ஆஃபருடன் கூடிய விற்பனையை அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஆய்வு நிறுவனமான Redseer Strategy Consultants இன் புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் பண்டிகைக் கால விற்பனையின் முதல் நான்கு நாட்களில் மொத்த விற்பனைப் பொருட்களின் மதிப்பு (GMV) ரூ.29,000 கோடியை கடந்திருக்கும் என்றும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16% வளர்ச்சியைக் கண்டுள்ளதும் என்றும் அறிவித்துள்ளது.

Great Indian Festival 2021: Inside Amazon's Month-Long Sale Event | Gadgets  360

நுகர்வோரின் தேவை மற்றும் நல்ல ஆஃபர் கைநழுவி விடுமோ என்ற அச்சமே முதல் 4 நாட்களிலேயே அதிக அளவிலான ஆடர்கள் குவியக்காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சராசரி விற்பனை விலையில் விற்கும் பிளாட்ஃபார்களின் ஆர்டர் மற்றும் வர்த்தகம் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஃபிளிப்கார்ட்டின் 'தி பிக் பில்லியன் டேஸ்' மற்றும் அமேசானின் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்' ஆகியவற்றில் ப்ரைம் கஸ்டர்மகளுக்கு ஒருநாள் முன்னதாக, அதாவது, 7ம் தேதியே விற்பனை தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு ப்ரைம் கஸ்டர்மகளுக்கான முதல் நாள் விற்பனை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை கால சிறப்பு விற்பனையானது, ஒட்டுமொத்தமாக 2023ம் ஆண்டு நடந்த வணிகத்தை விட 6 மடங்கு அதிகரித்துள்ளது.

Flipkart Big Billion Days: Buyers Saved Rs 11,500 Crores During Sale; More  Stats - News18

பண்டிகை விற்பனை தொடங்கும் முன்பே, அதிக மதிப்புள்ள பொருட்களுக்கான விலைகளை பயனர்கள் லாக் செய்வதற்கான முக்கிய அம்சமான 'ப்ரீ-புக்/பிரைஸ் லாக்' அம்சத்தையும் ஆன்லைன் ஷாப்பர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இந்த அம்சங்கள் மூலமாக வாடிக்கையாளர்கள் குறைந்த கட்டணத்தை செலுத்தி குறிப்பிட்ட காலஅவகாசம் உள்ள பொருட்கள் மீதான ஆஃபரை லாக் செய்ய முடியும். பின்னர் விற்பனை ஆரம்பித்த பிறகு அந்த பொருளை சிறப்பு சலுகையுடன் வாங்க முடியும். பண்டிகை கால சிறப்பு விற்பனையில் ஃபேஷன், அழகு, பர்சனல் கேர், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக ரெட்சீர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் தளங்கள் 'ப்ரீ-புக்/பிரைஸ் லாக்' அம்சங்கள் மூலமாக எவ்வளவு பேர் ஆர்டர் செய்வார்கள் என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்ததால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடிந்ததாகவும், வேகமான டெலிவரி மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 4 நாட்களில் 1 கோடி ஆர்டர்கள்; Meesho-வில் களைக்கட்டியது பண்டிகை கால விற்பனை!

From around the web