அடேங்கப்பா.. குறைந்த செலவில் பேட்டரி கார் தயாரிப்பு.. அசத்திய மெக்கானிக்..!

 
பேட்டரி கார்
மெக்கானிக் ஒருவர் குறைந்த விலையில் பேட்டரி கார்களை உருவாக்கி உள்ளார்.
 

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பெரிய பாபு சமுத்திரம் பகுதியைச் மணிகண்டன். இவர் மெக்கானிக் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது மோட்டர் உதவியுடன் குறைந்த விலையில் பேட்டரி கார்களை உருவாக்கி உள்ளார். ஒன்றரை லட்சம் ரூபாய் செலவில் பேட்டரி கார்கள் உருவாக்கி வருகிறார்.

மிகக்குறைந்த விலையில் பேட்டரி கார் - விழுப்புரம் மெக்கானிக்கின் சாதனைக்கு  அங்கீகாரம் கிடைக்குமா?

இந்த பேட்டரி கார் அப்பகுதிமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பழைய கார்களில் உள்ள இஞ்சின்களை அகற்றி, அதில் பேட்டரிகளை மட்டும் பொருத்தி இந்த வகை கார்களை வடிவமைப்பதாக மணிகண்டன் தெரிவித்தார்.

தனக்கு தேவையான பொருளாதார உதவிகள் கிடைத்தால், குறைந்த விலையில் பேட்டரி கார்களாக மாற்றம் செய்து தரப்படும் எனவும் அவர் கூறினார். வெறும் ஒன்றரை லட்சம் செலவில் பேட்டரி கார்கள் தயாரிக்கப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web