அடேங்கப்பா.. இரண்டே மணி நேரத்தில் 1 கோடிக்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஆடுகள்..!!

 
ஆடுகள் விற்பனை
உளுந்தூர்பேட்டையில் தீபாவளி பண்டிகையையொட்டி நடைபெற்ற வாரச்சந்தையில் 2 மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்றுத்தீர்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் வாரந்தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் 25 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே ஆடுகள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

Read all Latest Updates on and about பக்ரீத் பண்டிகை

இந்நிலையில், அடுத்த வாரம்  தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. காலை 7 மணிக்கு தொடங்கிய சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆயிரக்கணக்கான ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

Goats sold at Ulundurpet market for Rs.2 crore | உளுந்தூர்பேட்டை சந்தையில்  ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடு ஒன்று 8 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. எனவே சுமார் 2 மணி நேரத்தில் 1 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

From around the web