ஆதவ் அர்ஜூனா விசிக விலிருந்து 6 மாதங்கள் இடை நீக்கம்... திருமா அதிரடி அறிக்கை!

 
திருமா ஆதவ் அர்ஜுனா

 சென்னையில் நடைபெற்ற “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இருவரும் கலந்து கொள்வதாக இருந்தது.  மாநாட்டில் விஜய், திமுகவை விமர்சித்து பேசிய பிறகு புத்தக வெளியிட்டு விழாவில் பங்கேற்க மாட்டேன் என திருமாவளவன் கூறினார். இதனைத் தொடர்ந்து  புத்தக வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்த விழாவில்  பேசிய விஜய், புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க விடாமல் திருமாவளவனுக்கு கூட்டணி அழுத்தம் தரப்பட்டதாகவும் விஜய் குறிப்பிட்டார். 

விசிக


அதே மேடையில் விசிகவின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், பிறப்பால் முதல்வரை உருவாக்கும் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என திமுகவை கடுமையாக சாடியிருந்தார். கூட்டணிக்குள் இருக்கும்போதே, திமுகவை வெளிப்படையாக விமர்சித்து பேசியது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  விஜயின் கருத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் பதில் அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விஜயின் கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை எனக் கூறினார். அத்துடன் கட்சியில் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு  , " ஆதவ் அர்ஜூனா கட்சி நலனுக்கு எதிராக பேசி வருவதாக நிர்வாகிகள் தலைமையின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். வி.சி.க.வில் தலித் அல்லாத நிர்வாகிகள் மீதான குற்றசாட்டில் உயர்மட்ட குழு தான் முடிவு செய்யும். அதன்படி நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்து அறிவிப்போம்.” எனக் கூறியிருந்தார்.  

திருமா திருமாவளவன் ஸ்டாலின்
விசிகவை பொறுத்தவரை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருப்பவர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சி நலனிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் போது தலைவர், பொதுச் செயலாளர் அடங்கிய உயர்நிலைக் குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும். குறிப்பாக தலித் அல்லாதவர்கள் எந்த பொறுப்பில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை என்று வரும் போது உயர்நிலைக் குழுவின் கவனத்திற்கு சென்று ஆலோசிக்கப்படும். அந்தவகையில் இன்று முதல்வரை சந்திக்கும் திருமா செய்தியாளர்களிடம் ஆதவ் அர்ஜூனா விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து  6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளார். அத்துடன் ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக விசிக சார்பில் ரூ10 லட்சம் வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  .

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!