தவெகவில் இணைந்த பிறகு ஆதவ் அர்ஜுனா திருமா சந்திப்பு!

 
திருமா ஆதவ் அர்ஜுனா


 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்   ஆதவ் அர்ஜுனா. இவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனையடுத்து ஆதவ் அர்ஜுனா கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்  6 மாதங்கள்இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

விஜய் திருமா


இதனைத் தொடர்ந்து, கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்த ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைவது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.தவெக தலைவர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திய பிறகு இன்று அக்கட்சியில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

திருமா ஆதவ் அர்ஜுனா
தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள , தவெகவின் அரசியல் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமியுடன் ஆதவ் அர்ஜுனா இணைந்து தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என தவெக தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்தில் ஆதவ் அர்ஜுனா சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். ஆதவ் அர்ஜுனா தவெகவில் இன்று இணைந்த நிலையில், திருமாவளவனை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web