ஆடித் திருவிழா.. 100 ஆடு, 500 கோழி - 10,000 பேருக்குப் பிரம்மாண்ட கறி விருந்து!
Aug 2, 2026, 16:40 IST
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோபால்பட்டியில் அருள்மிகு முனீஸ்வரர் திருக்கோவில் ஆடித் திருவிழா மிகவும் கோலாகலமாக வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

ஆடித் திருவிழாவை முன்னிட்டு முனீஸ்வரர் சுவாமிக்குச் சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நேர்த்திக்கடனாகச் சாமிக்கு 100 ஆடுகள் மற்றும் 500 கோழிகள் பலியிடப்பட்டுப் பிரம்மாண்டமான முறையில் படையலிடப்பட்டது. படையலிடப்பட்ட இறைச்சியைக் கொண்டு பக்தர்களுக்குப் பிரம்மாண்ட அசைவ கறி விருந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ததுடன், இந்த விமர்சையான கறி விருந்தில் பங்கேற்று மகிழ்ந்தனர்.
