ஆடிப்பெருக்கு... நாளை தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை - பள்ளி,கல்லூரிகளுக்குவிடுமுறை அறிவிப்பு!

 
விடுமுறை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு, நாளை ஆகஸ்ட் 3ம் தேதி திருப்பூர், சேலம், தருமபுரி மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடிப்பெருக்கு

இந்த உள்ளூர் விடுமுறையை ஒட்டி, குறிப்பிட்ட 4 மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை இயங்காது. இவ்விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, திருப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.ஆடிப்பெருக்கு மற்றும் தீரன் சின்னமலையின் நினைவு நாளை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.