ஆடிப்பெருக்கு.. நாளை முதல் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு!

 
AC பேருந்து ஏஸி

வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் ஆடிப்பெருக்குப் பண்டிகையை முன்னிட்டு, பயணிகள் வசதிக்காகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும், சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நாளை ஜூலை 31: 420 சிறப்புப் பேருந்துகளும், ஆகஸ்ட் 1: 330 சிறப்புப் பேருந்துகளும், ஆகஸ்ட் 2: 270 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

பேருந்து

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் தலா 120 சிறப்புப் பேருந்துகளும், ஆகஸ்ட் 2-ஆம் தேதி 55 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படும்.

விடுமுறை பேருந்து சொந்த ஊர் கிளாம்பாக்கம்  கூட்டம் பண்டிகை திருவிழா

மாதவரம் பேருந்து முனையத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, போளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் தலா 45 சிறப்புப் பேருந்துகளும், ஆகஸ்ட் 2-ஆம் தேதி 50 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. பயணிகள் கூட்ட நெரிசலின்றிப் பயணம் செய்ய ஏதுவாக இந்த சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.