ஆடிப்பூரம்.. அம்மனுக்கு சாத்தப்பட்ட வளையால் பிரசாதமாக கிடைத்தால் என்ன செய்ய வேண்டும்?!

 
அம்மன் ஆடிப்பூரம் வளையல்

ஆடிப்பூரத் திருவிழாவின் போது அம்மனுக்குச் சாத்தப்பட்டு, பிரசாதமாக நமக்குக் கிடைக்கும் வளையல்கள் மிகவும் விசேஷமானவை மற்றும் மங்கலப் பொருட்கள் நிறைந்தவை ஆகும். அந்தப் புனிதமான வளையல்களைப் பெற்றவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிஞ்சுக்கோங்க. 

ஆடிப்பூர பிரசாதமாகப் பெறப்பட்ட வளையல்களைத் தட்டில் வைத்துத் தாயாரின் பாதங்களை மனதில் நினைத்து வணங்கி, அன்றைய தினமே பெண்கள் தங்கள் கைகளில் அணிந்து கொள்வது மிகுந்த நன்மையைத் தரும்.

ஆடிப்பூரத்தன்று அம்மனின் அருள் பெற்ற வளையல்களை அணியும்போது கணவரின் ஆயுள் கூடும்; குடும்பத்தில் மங்கல காரியங்கள் தடையின்றித் தொடரும் என்பது ஐதீகம்.

மகப்பேறுக்காகக் காத்திருக்கும் பெண்கள் இந்த வளையல்களைப் பிரசாதமாகப் பெற்று கைகளில் அணிந்து கொண்டு, அம்பாளைத் தீவிரமாக வழிபட விரைவில் நன்மக்கட்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

உங்களிடம் அதிகமான வளையல்கள் இருந்தால், அவற்றை வீட்டிலுள்ள பிற பெண்களுக்கும், உறவினர்கள் அல்லது அக்கம் பக்கத்திலிருக்கும் சுமங்கலி பெண்களுக்கும் பிரசாதமாகப் பகிர்ந்து வழங்கலாம்.

அம்மன் ஆடிப்பூரம் வளையல்

வளையல்கள் கையில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக உடைந்து விட்டால், அதற்காகப் பயப்படத் தேவையில்லை. உடைந்தத் துண்டுகளைக் கால் படாத இடத்தில் அல்லது செடி கொடிகளின் அடியில் போட்டுவிடலாம்.

சில நாட்கள் கழித்து அந்த வளையல்களைக் கழற்ற வேண்டிய நிலை வந்தால், அதைத் தூக்கி எறியாமல் பூஜை அறையிலேயே அம்மன் படத்தின் முன் வைத்து வழிபடலாம். ஆடிப்பூர வளையல் பிரசாதம் என்பது சாட்சாத் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியான அம்பிகையின் நேரடி அருளாகக் கருதப்படுகிறது.