ஆடி திருவாதிரை விழா.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

 
விடுமுறை பள்ளி மாணவர்கள்

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினைக் முன்னிட்டு, இன்று அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுகள் மற்றும் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும்.

அரியலூர் ராஜ ராஜ சோழன் தஞ்சாவூர் பெரிய கோயில்

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி (சனிக்கிழமை) அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முழு வேலை நாளாகச் செயல்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.