தீபாவளி நெருங்கும் நிலையில் ஆவின் பால் பொருட்கள் விலை அதிரடி உயர்வு - நாளை முதல் அமல்!
தீபாவளிப் பண்டிகை வரவிருக்கும் நிலையில், ஆவின் நிறுவனம் தன் நெய், வெண்ணெய், தயிர், மோர் மற்றும் இனிப்பு வகைகளின் விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த திருத்தப்பட்ட விலைப் பட்டியல் நாளை அக்டோபர் 28ம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.

முக்கியப் பொருட்களின் திருத்தப்பட்ட விலைப் பட்டியலின்படி, ஆவின் நெய் 100 மி.லி பெட் ஜார் ₹95; 500 மி.லி ₹400; 1 லிட்டர் நெய் ₹780. வெண்ணெய்: 100 கிராம் வெண்ணெய் (C/T) ₹70.
இனிப்பு & கோவா வகைகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ரசகுல்லா: 100 கிராம் ₹50. குலாப் ஜாமூன்: 250 கிராம் ₹115. மைசூர்பாக்: 250 கிராம் ₹160. பானங்கள்: 200 மி.லி லஸ்ஸி ₹23.

பண்டிகைக் காலத்திற்குத் தேவையான பலகாரங்கள் செய்ய ஆவின் நெய் மற்றும் பால் பொருட்களை அதிகம் நம்பியிருக்கும் வேளையில், இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
