"இனி இந்த நாடே ஜந்தர் மந்தராக மாறிவிடும்" - அபிஜீத் திப்கே எச்சரிக்கை!
Oct 12, 2026, 18:15 IST
டெல்லியில் போராட்டங்கள் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ இடங்களின் பட்டியலில் இருந்து ஜந்தர் மந்தர் நீக்கப்பட்டதற்கு அரசியல் விமர்சகரும், 'காக்ரோச் ஜனதா கட்சி' அமைப்பாளருமான அபிஜீத் திப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தர் இனி அமைதியான போராட்டக் களமாக இருக்காது என்றும், அது ஏற்கனவே ஒரு போர்க்களமாக மாற்றப்பட்டு விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு தரப்பு போராட்ட இடங்களை நீக்கினால், இனி இந்த நாடே ஒரு ஜந்தர் மந்தராக மாறி எதிர்ப்பைக் காட்டும் என அவர் எச்சரித்துள்ளார். இன்று போராட்டத்துக்கான இடத்தை மத்திய அரசு தடை செய்துள்ளதுபோல, நாளை ஜனநாயகத்தையே முற்றிலுமாக ரத்து செய்யக் கூடும் என்று அவர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
