துபாய்க்கு தப்பிச்செல்ல முயன்ற தலைமறைவு குற்றவாளி கைது.. விமான நிலையத்தில் பரபரப்பு!

 
பிரேம்குமார்

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூரைச் சேர்ந்த வாலிபர் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (34). இவர் மீது நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கொடுமை, மிரட்டல், ஆபாசமாக திட்டியதாக பல்வேறு வழக்குகள் உள்ளன. இவரை போலீசார் தேடி வந்தனர்.

ஆனால் பிரேம்குமார் போலீசில் சிக்காமல் தலைமறைவானார். வெளிநாடு தப்பிச் செல்லவும் திட்டமிட்டார். இத்தகவல் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு கிடைத்தது. இதையடுத்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் குமார் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனுடன் அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட தயாராகி வந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அந்த விமானத்தில் துபாய்க்கு தப்பிச் செல்ல நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தால் தேடப்பட்டு வந்த பிரேம் குமார் இருந்தது தெரிய வந்தது.

குடியுரிமை அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை கம்ப்யூட்டரில் சோதனை செய்தபோது, தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை பிடித்து குடியுரிமை அலுவலக அறையில் அடைத்து வைத்துவிட்டு துபாய் பயணமும் ரத்து செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பிரேம்குமாரை கைது செய்ய நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு காவலர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். பின்னர் அவரை நெய்வேலிக்கு அழைத்துச் சென்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web