BREAKING! மருத்துவமனையில் ஏசி வெடித்து தீயில் கருகி 15 பச்சிளம் குழந்தைகள் பலி... கதறித் துடிக்கும் பெற்றோர்கள்!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 15 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏர் கண்டிஷனர் கம்ப்ரசர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து நேரிட்டதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தின் போது அந்தப் பிரிவில் மொத்தம் 16 குழந்தைகள் பராமரிப்பில் இருந்ததாகவும், தீ விபத்தில் சிக்கியவர்களில் ஒரே ஒரு குழந்தை மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த துயர சம்பவத்திற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
