கடும் நெருக்கடியில் ஏ.சி சண்முகம்.. வேலூர் தொகுதியில் களமிறங்கும் 9 சண்முகங்கள்!

 
 ஏ.சி.சண்முகம்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கீழ் ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவர் சுயேச்சையாக போட்டியிடுவதால், அவரை எதிர்த்து பன்னீர்செல்வம் 5 பேர் போட்டியிடுகின்றனர். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், வேலூரில் 9 சண்முகங்கள் போட்டியிடுவது பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியைப் பொறுத்த வரையில் மொத்தம் 50 வேட்புமனுக்கள் பெறப்பட்டு 37 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிமுக சார்பில் டாக்டர் பசுபதி, திமுக சார்பில் கதிர் ஆனந்த், பாஜக சார்பில் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் முக்கிய வேட்பாளராக ஏற்கப்பட்டனர்.

இந்நிலையில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் போல் சண்முகம், சண்முகவேலு, சண்முகசுந்தரம் ஆகிய 3 பேரின் பெயரில் மொத்தம் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1) பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம்.
2) சத்துவாச்சாரி சண்முகவேலு.
3) வாணியம்பாடி அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம்.

4) சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் ஜி.சண்முகம்.
5) வாணியம்பாடியை சேர்ந்தவர் பி.சண்முகம்.
6) வேலூர் மாவட்டம் திருவலத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்.

7) வேலூர் மாவட்டம் சலவன் பேட்டையை சேர்ந்தவர் கே.சண்முகம். 

8) வேலூர் மாவட்டம் வித்தாச்சி புரத்தை சேர்ந்தவர் ஜி.சண்முகம்.
9) வாணியம்பாடி புதூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.பி.சண்முகம்.
10) வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு வேலூர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் சண்முகசுந்தரம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web