சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.. 10ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக பலி..!!
Nov 7, 2023, 18:19 IST

பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கேரள மாநிலம் பாலக்கோட்டில் புலப்பட்டாவில் உள்ள எம்என்கேஎம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீ சயனா என்பது தெரியவந்துள்ளது. மூன்று பேருந்துகளில் 135 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் அடங்கிய 150 பேர் கொண்ட குழு மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளது.
நேற்றிரவு மைசூர் அரண்மனைக்குச் சென்று திரும்பியபோது, ஸ்ரீ சயனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறஹ்டு.. உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் மாணவி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அந்த மாணவியின் மறைவையடுத்து, குழுவினர் தங்களது பயணத்தை நிறுத்திவிட்டு வீடு திரும்ப முடிவு செய்தனர். சுற்றுலா சென்ற இடத்தில் மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
From around the
web