தறிகெட்டு ஓடிய லாரி மோதி விபத்து... தந்தையும், மகளும் பலியான சோகம்!

 
எல்டோ
 கேரள மாநிலம் பெரும்பாவூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது, டிப்பர் லாரி மோதியதில், டூ வீலரில் சென்று கொண்டிருந்த தந்தையும், மகளும் பரிதாபமாக பலியானார்கள். கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் எல்டோ (52). பாலகாட்டில் வேளாண் உதவியாளராக பணியாற்றி வந்தார்.  இவரது மகள் பிளெஸ்ஸி. பிளெஸ்ஸி அந்த பகுதியில் உள்ள நர்ஸிங் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.

எல்டோ

இந்நிலையில், பெரும்பாவூரில் இருந்து அங்கமாலி ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் எல்டோவும், பிளெஸ்ஸியும் சென்று கொண்டிருந்தனர். 
இவர்களது இருசக்கர வாகனம் பெரும்பாவூர் - காலடி எம்.சி ரோட்டில் உள்ள தண்ணிப்புழா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி மோதியதில் எல்டோவும், பிளெசியும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.  

பாகிஸ்தான் ஆம்புலன்ஸ்


லாரி மோதிய வேகத்தில் பிளெஸ்ஸி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் எல்டோ  உயிரிழந்தார்.

From around the web